டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் 1000 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக பரவிய தகவல் குறித்து டெல்லி விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 20 நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்காக சாலை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில். விமானங்கள் சிலவும் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 1000 விமான சேவைகள் டெல்லி விமான நிலையத்தில் ரத்து செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை டெல்லி விமான நிலையம் மறுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்ல தேவையான இடவசதி உள்ளதாகவும், 6% உள்நாட்டு விமான சேவைகளை ரத்து செய்ய மட்டுமே கோரிக்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு பிரதமர் மோடி முன்கூட்டியே மன்னிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.