நாடாளுமன்றத்தின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் நடந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தொடரில் மற்றும் 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 35 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் மக்களவையில் 26 மசோதாக்களும், மாநிலங்களவையில் 9 மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மக்களவையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகளை முன்வைப்பார் என்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது