Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

Advertiesment
மென்பொருள் பொறியாளர்

Siva

, வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (18:49 IST)
வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞ 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளில் நிராகரிக்கப்பட்ட பிறகு, OpenAI நிறுவனத்தில் சேர்ந்து, மாதம் ₹20 லட்சம் சம்பாதித்து, பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
 
கணினி அறிவியல் துறையில் பிடெக் பட்டம் பெற்ற தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி இந்த இளைஞர். ஆரம்பத்தில், ஆண்டுக்கு ₹3.6 லட்சம் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலைக்கு எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். 
 
அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து நிராகரிப்புகள் ஏற்பட்ட நிலையில் ஒரே ஒரு நேர்காணல் அழைப்பு அவருடைய வாழ்க்கையை புரட்டி போட்டது. OpenAI நிறுவனத்தில் அவருக்கு மாதம் ₹20 லட்சம் சம்பளம் கிடைத்தது. இது அவரது முதல் வேலையின் சம்பளத்தை விட மிகப்பெரியது. 
 
"உங்களிடம் திறமையும் நம்பிக்கையும் இருந்தால், நீங்கள் இருக்கும் இடம் தேடி வேலை வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
விடாமுயற்சியும் திறமையும் இருந்தால், சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களாலும் உலகளாவிய வாய்ப்புகளை பெற முடியும் என்பதை அவரது கதை உணர்த்துகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!