Publish Date: Mon, 20 Sep 2021 (12:42 IST)
Updated Date: Mon, 20 Sep 2021 (13:41 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது திருப்பதியில் இன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது. நாள்தோறும் இரவு 11.30 வரை 8,000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.
பக்தர்கள் தங்களது ஆதார் கார்டுகளை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.