Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் : ஆந்திராவில் அதிர்ச்சி

Advertiesment
Gangrape
, வெள்ளி, 27 மே 2016 (19:08 IST)
14 வயது சிறுமியை 6 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தின், பெடபடுமண்டல் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கூலை வேலை செய்து பிழைத்து வரும் ஒரு தம்பதிக்கு 14 வயது மகள் இருக்கிறாள்.
 
சம்பவத்தன்று, அந்த சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர். அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் ரவி(30) என்பவர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
பயம் காரணமாக இதுபற்றி அந்த சிறுமி, தன்னுடைய பெற்றோர்களிடம் வாய் திறக்கவில்லை. ஆனால், உடல் ரீதியாக பாதிப்படைந்துள்ளதை அறிந்த அவரது பெற்றோர்கள், அந்த சிறுமியை துருவி விசாரித்த பின்புதான் இந்த உண்மை அவர்களுக்கு தெரிய வந்தது.
 
இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான அந்த ஆறு பேரை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஆக்‌ஷனில் இறங்க தயாராகும் ஜெயலலிதா!