4 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்!
4 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து நான்கு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்றை அதன் தாய் கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி ஜெய்பூரில் 4 மாத பெண் குழந்தையின் உடல் ஒரு வீட்டில் உள்ள பெட்டியில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
தடயவியல் பரிசோதனையின் மூலம் குழந்தையின் ரத்தம் அதன் தாயின் கை நகங்களில் உறைந்திருந்ததை கண்டுபிடித்தனர் காவல்துறையினர். பின்னர் காவல்துறையினர் அந்த பெண்ணை விசாரித்ததில், ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததால், அதை கழுத்தை நெரித்து கொன்றதாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அந்தப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.