Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழச்சாறில் மயக்க மருந்து: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்

பழச்சாறில் மயக்க மருந்து: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்

Advertiesment
பழச்சாறில் மயக்க மருந்து: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
, சனி, 10 செப்டம்பர் 2016 (09:22 IST)
பெங்களூரில் பிறந்த நாள் விழா ஒன்றுக்கு சென்ற சிறுமிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.


 
 
பலாத்காரம் செய்த டேனியல் என்ற வாலிபரும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று சிறுமி தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்து மற்ற தோழிகளுடன் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றுள்ளார்.
 
இவர்களுடன் டேனியலும் சென்றுள்ளார். அங்கு காலியாக இருந்து வீடு ஒன்றுக்கு சிறுமியை அழைத்து சென்ற அந்த வாலிபர் மயக்க மருந்து கலந்த பழச்சாறை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளான். பின்னர் மயக்கமடைந்த சிறுமியை டேனியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
மயக்கம் தெளிந்ததும், உன்னை செல்போனில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளே. இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உனது நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான். இதனை தொடர்ந்து சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் டேனியல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

104 ரூபாயும், ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை பலாத்காரம் செய்துகொள்: கொடூர தாய்!