Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்கா ரெட்டியை கொலை செய்தது எப்படி? குற்றவாளி அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!

Advertiesment
பிரியங்கா ரெட்டியை கொலை செய்தது எப்படி? குற்றவாளி அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!
, வெள்ளி, 29 நவம்பர் 2019 (18:04 IST)
ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான லாரி டிரைவர் ஒருவர் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம் போலீசாரை அதிர செய்தது 
 
ஐதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் கால்நடை டாக்டர் நேற்று முன்தினம் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவருடைய இரு சக்கர வாகனம் திடீரென பழுதானது. இதனை அடுத்து அவர் தனது தங்கைக்கு மொபைல் மூலம் தகவல் கொடுத்த நிலையில், திடீரென அவரது மொபைல் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் அவருடைய பிணம் எரிந்த நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோவில் அடிப்படையில் லாரி ஓட்டுநர் மற்றும் க்ளீனர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து லாரி டிரைவர் முகமது பாஷா என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாரே திடுக்கிட வைத்தது
 
இருசக்கர வாகனம் பழுதானதால் சாலையில் அப்பாவியாக நின்று கொண்டிருந்த டாக்டர் பிரியங்கா ரெட்டிக்கு உதவுவதுபோல் நடித்ததாகவும் அதனை அவர் நம்பிய போது திடீரென அவரை தூக்கிக் கொண்டு மறைவான இடத்திற்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்
 
இந்த குற்றத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் மட்டும் இல்லாமல் மேலும் இருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளதை அடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஒரே நாளில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் பிடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலேசியத் தமிழ் தொழிலாளர்களை காவு வாங்கும் மலிவு விலை மது: காரணமும் தீர்வும்