Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்..!

Buddhadev

Senthil Velan

, வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:34 IST)
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
 
கொல்கத்தாவில் புகழ்பெற்ற பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா முழுநேர அரசியலில் ஈடுபடும் முன் பள்ளி ஆசிரியராக இருந்தவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொலிட்பீரோவில் அங்கம் வகித்தவர்.

எம்எல்ஏ, அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர், 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த  புத்ததேவ் பட்டாச்சார்யா, சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கொல்கத்தாவில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மேற்கு வங்கத்தின் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கடைசி முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?