முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், பாரத ரத்னா விருது பெரும் பட்டியலில் இவர்கள் இருவரது பெயர் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா, நாட்டிற்காக சேவை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விருதை 53 பேர் பெற்றுள்ளனர். கலை, அறிவியல், இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
1954 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த விருது பெறுபவரக்ள் குறித்த பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டிவெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டு பாரத ரத்னா விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மறைந்த முன்னாள் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங், இந்துத்துவவாதி சாவர்க்கர், முன்னாள் ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் உள்பட சிலர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மூன்று அல்லது நான்கு பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.