சமீபத்தில் அம்பானியின் மகன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் இந்தியாவின் இன்னொரு பெரிய தொழிலதிபரான அதானியின் மகன் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தின் மொத்த செலவே ஒரு சில லட்சங்கள் என்றும் செய்திகள் பரவுகின்றன.
பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜித், குஜராத் வைர வியாபாரியின் மகள் ஷாவின் மகள் திவாஷாவை திருமணம் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த திருமணம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
குஜராத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள், தனியார் விமானங்கள் மற்றும் பல நாடுகளில் இருந்து வரும் சமையல் நிபுணர்கள் கலந்து கொள்வர் என்று பத்தாயிரம் கோடி செலவில் திருமணம் நடைபெறும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
ஆனால், நேற்று கௌதம் அதானி செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்த திருமணம் மிக எளிமையாக, பாரம்பரிய முறையில் நடக்கும். பிரம்மாண்டமான முறையில் நடத்த மாட்டோம். சாதாரண குடும்பத்தின் திருமணம் போலவே நடக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
அதானி குடும்ப வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, இந்த திருமணத்தின் மொத்த செலவாக சில லட்சங்கள் மட்டுமே இருக்குமென கூறப்பட்டுள்ளது, இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.