Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் மருத்துவமனையில் அனுமதி..!!

Advertiesment
Pradeepa Patil

Senthil Velan

, வியாழன், 14 மார்ச் 2024 (16:24 IST)
முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
89 வயதான பிரதீபா பாட்டீல் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பாரதி மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் முதற்கட்ட மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
 
மேலும் அவருக்கு தொடர் சிகிச்சையளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2007 முதல் 2012 வரை பதவி வகித்த பாட்டீல், நாட்டின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார். நாட்டின் 12வது ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணம் தாண்டிய உறவு: பெண் வெட்டிக் கொலை!