பங்குச்சந்தை மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் என்.எஸ்.இ., சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணனின் ஜாமின் மனு குறித்து முக்கிய உத்தரவை சற்றுமுன் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் சட்டவிரோதாரம் பண பரிமாற்ற புகாரில் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் சற்று முன் முன்னாள் தேசிய பங்குச்சந்தை இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன் அவர்களிடம் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை விசாரணை செய்தது என்பதும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.