ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று தஞ்சையில் பேட்டி அளித்த டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து பன்னிரண்டாம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார்.,
மேலும் அதிமுக தற்போது பிராந்திய கட்சியாக மாறி உள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் அதன் செல்வாக்கை இழக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு 5000 முதல் 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும் என்றும் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது