Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 20 மார்ச் 2025 (18:30 IST)
காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ  முகமது கான் என்பவர் துளசி பாக் என்ற பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் தொழுகை நடத்த சென்றபோது, பாதுகாப்பு அதிகாரி ஒருவரின்   துப்பாக்கியை எடுத்து திடீரென தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
 
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
கடந்த 1996 ஆம் ஆண்டு, குரேஸ் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முகமது கான், பின்னர் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments