அமைச்சராகிறாரா முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்? பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

Siva
வியாழன், 30 அக்டோபர் 2025 (16:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், விரைவில் தெலங்கானா அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிறுபான்மை சமூக வாக்குகள் நிறைந்த ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலை மனதில் வைத்து, முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் ஒதுக்கீட்டில் எம்.எல்.சி.யாக பரிந்துரைக்கப்பட்ட அசாருதீனை அமைச்சராக்குவதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. அனேகமாக நாளை பதவியேற்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 
இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்த முடிவானது வாக்காளர்களை கவர மேற்கொள்ளப்பட்ட 'மோசமான உள்நோக்கம்' கொண்ட செயல் என்று தெலங்கானா பாஜக குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.
 
அசாருதீன் அமைச்சரவையில் இணைவது, ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இடம்பெறும் முதல் சிறுபான்மை சமூக அமைச்சராக இருக்கும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எப்படி இருக்கீங்க சின்னம்மா? சசிகலாவை பாசத்தோடு விசாரித்த ஓபிஎஸ், செங்கோட்டையன்! - தேவர் ஜெயந்தியில் நெகிழ்ச்சி!

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments