அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

Siva
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (08:09 IST)
முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட்  முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை அமலாக்கத்துறை  அதிகாரியாக இருந்து கைது செய்து சர்ச்சையை கிளப்பிய கபில் ராஜ், தற்போது தனது அரசு பணியை விட்டு விலகி, ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.
 
மத்திய அரசின் IRS அதிகாரியாக பணிபுரிந்த கபில் ராஜ், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
 
கபில் ராஜ் பணியில் இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைது நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த கைதுகள் தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தின.
 
அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனியார் நிறுவனங்களில் சேருவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கபில் ராஜ் ஒரு முக்கிய அரசியல் தலைவர்களின் கைதுக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
 
கபில் ராஜின் இந்த புதிய பயணம், அரசியல் மற்றும் பெருநிறுவன உலகத்தின் உறவுகளைப் பற்றிய விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments