Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

Advertiesment
இடைத்தேர்தல்

Siva

, திங்கள், 23 ஜூன் 2025 (15:30 IST)
கேரளாவின் நிலாம்பூர் தொகுதி  இடைத்தேர்தல் முடிவு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு  மிகவும் முக்கியமானது. ஏனெனில் நிலம்பூர் தொகுதிக்கான பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய பிரியங்காவுக்கு, கேரள தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், கட்சித் தொண்டர்களிடையே அவரது தலைமை மேலும் வலுப்பெறும்.  
 
நிலம்பூர், பிரியங்காவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. ஆகையால், தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கி, வாக்காளர்களிடையே சாதகமான சூழலை உருவாக்க பிரியங்கா காந்தி முயற்சித்தார். 
 
பினராயி விஜயன் அரசு தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவை நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதிக்கு அருகிலுள்ள இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல், ஆளும் சி.பி.ஐ.(எம்.) தலைமையிலான எல்.டி.எஃப். மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். ஆகிய இரு தரப்பினருக்கும் ஒரு கௌரவ போராக மாறியுள்ளது.
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் பிரியங்கா காந்தியின் தலைமைக்கு எதிராக விமர்சனங்கள் எழும் என்பதால் தான், தனது வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்த பிரியங்கா தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அவர் எதிர்பார்த்தபடியே நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகாலாயா தேனிலை கொலை போல் இன்னொரு கொலை.. கூலிப்படையை வைத்து கணவரை கொன்ற மனைவி..!