Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’சீனா’ என்ற பெயரையே மோடி உச்சரிப்பதில்லையே... கவனித்தீர்களா?

’சீனா’ என்ற பெயரையே மோடி உச்சரிப்பதில்லையே... கவனித்தீர்களா?
, சனி, 4 ஜூலை 2020 (07:56 IST)
எந்த உரையிலும் ‘சீனா’ என்ற பெயரை பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? என ப.சிதம்பரம் கோரியுள்ளார். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள். சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நேற்று தாக்குதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்டார். 
webdunia
அங்கு எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய வீரர்களின் தியாகத்தை 130 கோடி மக்களும் நினைவு கூர்கிறார்கள். இந்திய வீரர்களின் வலிமை கண்டு எதிரிகள் அஞ்சி நடுங்குகிறார்கள். இந்தியாவிடமிருந்து ஒரு அங்குலம் நிலத்தை கூட யாராலும் பறித்துக் கொள்ள முடியாது. இந்திய வீரர்களின் வலிமை மலையை விட பெரியது என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது என்று கூறினார்.  
 
மேலும் திருக்குறளின் படைமாட்சி அதிகாரித்திலிருந்து குறளை உதாரணம் காட்டிய, அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் தயார் என்பதை காட்டுவோம். நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் தான். அதேசமயம் நாம் சுதர்சன சக்கரத்தையும் வைத்திருக்கிறோம் என்று வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார். 
webdunia
இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்ற பெயரை பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?
 
இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும், எதிரியை எதிரி என்று குறிப்பிடாமல் மறைமுகமாக பேசுவதற்கு பின்னணியில் என்ன பயனுல்லது எனவும் கேட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதுங்கி இருந்த முத்துராஜ்; ராவோடு ராவாக தேடி பிடித்த சிபிசிஐடி!