Publish Date: Sat, 25 Apr 2020 (11:22 IST)
Updated Date: Sat, 25 Apr 2020 (11:25 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, செங்கப்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் பகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.