பெங்களூரில் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் விமான நிலையங்களில் கூட மழைநீர் தேங்கி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் ஐடி ஊழியர்கள் சாலை வழியாக செல்ல முடியாததால் பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ரூபாய் 225 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து பெங்களூர் ஐடி நிறுவனங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் பெங்களூர் ஐடி நிறுவன ஊழியர்கள் போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் டிராக்டரில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் வெள்ளநீர் வடியாததால் ஊழியர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.