டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 58 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குளிருடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால், டெல்லி பாலம் மற்றும் சஃப்டர்ஜங் விமான நிலையங்களில் காணும் திறன் 500 மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது.
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 58 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், பஞ்சாப், அரியானா சண்டிகர், டெல்லி, உத்திரபிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும் எனவும்
ராஜஸ்தான், பீகார், சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூரிலும் பனி நீடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.