Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லடாக் யூனியன் பிரதேசத்தில் 5 புதிய மாவட்டங்கள்.. அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!

Amitshah

Mahendran

, திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (17:08 IST)
சமீபத்தில் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக்கில்  5 புதிய மாவட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். 
 
லடாக்கைப் பொறுத்தவரை, லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது  சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள்  அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
யூனியன் பிரதேசமாக இருப்பதால்,லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பதால்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வளர்ந்த, வளமான லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை பின்பற்றும் வகையில், யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று 5 புதிய மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய இந்த புதிய 5 புதிய மாவட்டங்கள்  மக்களுக்கான நன்மைகள் செய்யும், இனி ஒவ்வொரு திட்டமும் மக்கள் வீட்டின் வாசலிலேயே வந்து சேரும். லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் சொகுசு வாழ்க்கை.. கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 3 வழக்குகள்..!