சீனாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கண்ணாடி கதவு 3 வயது குழந்தை மேல் சரிந்து விழுந்ததில், குழந்தை படுகாயம் அடைந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீனா, போஷன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு பெண் குழந்தை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தது. வளாகத்தின் உள்ளே 3 வயது சிறுமி செல்லும் போது, வாசலில் இருந்த பெரிய கண்ணாடி கதவு சரிந்தது.
அந்த கண்ணாடி கதவு குழந்தை மேல் விழுந்தது. இதில் குழந்தை காயங்களுடன் உயிர் பிழைத்தது. கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் கண்ணாடி கதவு சரிந்தது குறித்து வணிக வளாக அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.