Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 வயது இளம்பெண்ணை கற்பழித்த 5 சிறுவர்கள்...

Advertiesment
20 வயது இளம்பெண்ணை கற்பழித்த 5 சிறுவர்கள்...
, வெள்ளி, 22 டிசம்பர் 2017 (11:16 IST)
இளம்பெண்னை 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நிர்பயா விவாகரத்திற்கு பின்பும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக டெல்லி மாறியிருக்கிறது. கடந்த சில வருடங்களில் சிறுமி முதல் பெண்கள் வரை பலர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 21ம் தேதி இரவு டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியில்  குப்பை கிடங்குகள் கொட்டப்பட்டிருக்கும் பகுதி வழியாக 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 சிறுவர்கள் அப்பெண்ணை பலவந்தமாக ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதால் பயந்த அந்த பெண் சத்தம் போடவில்லை எனத் தெரிகிறது. ஆனால், அடுத்த நாள் தனது உறவினர் ஒருவரிடம் அப்பெண் நடந்ததை கூற, இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 
 
இதையடுத்து, அந்த 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பதும், குப்பை கிடங்கு பகுதியில் பணி நேர வேலை செய்து வருபவர்கள் என்பதும் தெரியவந்தது.  அவர்கள் 18 வயது பூர்த்தியடையாதவர்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதில் செய்தி சொன்ன ஸ்டாலின்: கைகுலுக்கிய கருணாநிதி!