Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் டெல்லியில் தீவிபத்து – தீயணைப்பு படை போராட்டம் !

Advertiesment
மீண்டும் டெல்லியில் தீவிபத்து – தீயணைப்பு படை போராட்டம் !
, புதன், 6 மார்ச் 2019 (10:39 IST)
டெல்லியில் அமைச்சக அலுவலகங்கள் கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி சி.ஜி.ஓ. வளாகத்தில் உள்ள தீன் தயாள் அந்தியோதயா பவன் என்ற 11 மாடிக்கட்டிடம் உள்ளது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அமைச்சகம் உள்ளிட்ட சில அமைச்சகங்களின் அலுவலகங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.

இந்தக் கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென்று தீப்பற்றியுள்ளது. இந்தத் தீ வேகமாக அந்த தளம் முழுவதும் பரவி உள்ளது. இதையறிந்து அங்கு உடனே வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த தீக்கானக் காரணம் இதுவரை வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களுக்கும் முன்னர் டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இதுபோன்ற தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி கே வாசனை கழட்டி விட்ட ஸ்டாலின் – பின்னணி என்ன ?