ராகுல்காந்தி பிரியங்காகாந்தி மீது எப்ஐஆர்:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. தமிழக எதிர்க்கட்சிகள் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களை நேரில் சந்திப்பதற்காக நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹாத்ராஸ் என்ற பகுதிக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ராகுல் காந்தி போலீசாரால் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும் அதனால் ராகுல் காந்தி கீழே விழுந்ததாகவும் தெரிகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடந்து கொண்டதாக அவர்கள் இருவர் மீதும் உபி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரபிரதேச காவல்துறையினரின் பழிவாங்கும் செயல் இது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்த எஃப்ஐஆர் குறித்து கருத்து கூறி வருகின்றனர்