சீனாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த உரங்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றிற்கு சீனா விதித்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றுள்ளது.
இந்தியாவில் தேவையான விவசாய உரங்கள், காந்த தாதுப்பொருட்கள் பெருமளவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. மேலும் சுரங்கபாதைகளை துளையிடுவதற்கான நவீன கருவிகளும் சீனாவிலிருந்து இறக்குமதியாகி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் சீனா மேற்கண்ட பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இதனால் காந்தத்தை முக்கியமாக கொண்டு செயல்படும் ஆடியோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் கடந்த 13ம் தேதி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது சீனா உரங்கள், காந்த தாதுப்பொருட்கள் மற்றும் சுரங்கப்பாதை எந்திரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயத்துறையினருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
Edit by Prasanth.K