Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை.! டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது..!

Advertiesment
Jani Arrest

Senthil Velan

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (12:27 IST)
பெண் நடன கலைஞர் அளித்த பாலியல் புகாரில், நடன இயக்குனர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உதவிப் பெண் நடன இயக்குநருக்கு ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆந்திராவின் ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. 
 
அந்த புகாரில் படப்பிடிப்பின் போதே பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் திரைப்படங்களில் பணியாற்ற தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் அவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.  இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவாவில் வைத்து நடன இயக்குனர் ஜானியை கைது செய்துள்ளனர்.
 
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றுக்குள் நுழைந்து சண்டையிட்டதற்காக சிறை சென்ற நிலையில் தற்போது பாலியல் புகாரில், ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெபனான் பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புகள் ஹெஸ்பொலாவை எந்த அளவுக்கு பாதிக்கும்?