Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மந்திரவாதியின் பேச்சை கேட்டு 2 வயது மகளை ஆற்றில் வீசிய தந்தை!

Advertiesment
மந்திரவாதியின் பேச்சை கேட்டு 2 வயது மகளை ஆற்றில் வீசிய தந்தை!
, செவ்வாய், 1 அக்டோபர் 2019 (08:58 IST)
மந்திரவாதி ஒருவர் கூறிய அறிவுரையால் ஆசை ஆசையாக வளர்த்து வந்த இரண்டு வயது மகளை ஆற்றில் வீசிய கொடூர தந்தை குறித்த செய்திகள் தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
 
அசாம் மாநிலத்தில் உள்ள பாஸ்கரா என்ற பகுதியை சேர்ந்தவர் பீர்பால். இவருக்கு ஜூனு என்ற மனைவியும் ரிஷிகா என்ற 2 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பீர்பால் உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் அவருக்கு உடல்நிலை சரியாகாததால் ஒரு மந்திரவாதியை பார்த்து சிகிச்சை பெற்றுள்ளார். அந்த மந்திரவாதி உன்னுடைய மகளால் தான் உனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்றும் அந்த மகளை ஆற்றில் தூக்கி வீசி விட்டால் உன்னுடைய உடல்நிலை சரியாகி விடும் என்று கூறியதாக தெரிகிறது 
 
 
மந்திரவாதியின் பேச்சை நம்பிய பீர்பால் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு, பெற்ற மகளை தூக்கி ஆற்றில் வீசியதாக தெரிகிறது. இதனை அடுத்து மகள் எங்கே? என்று அவருடைய மனைவி கேட்க, ஆற்றில் வீசி விட்டதாக பீர்பால் கூறியவுடன் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி போலீசில் புகார் செய்துள்ளார் 
 
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பீர்பாலை கைது செய்து விசாரணை செய்தபோது மந்திரவாதியின் பேச்சை கேட்டு தான் இவ்வாறு செய்ததாக கூறினார். மேலும் அவர் மனநிலை சரியில்லாதது போல் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோட்டம் வளர்த்து யூடியூபில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் இளம்பெண்!