Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்தான மகளை மேளதாளத்துடன் வீட்டுக்கு அழைத்து வந்த தந்தை: வைரல் புகைப்படம்..!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:50 IST)
கணவரை விவாகரத்து செய்த மகளை தனது வீட்டிற்கு மேளதாளத்துடன் அவருடைய தந்தை அழைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் குப்தா என்பவரின் மகள் சாக்சி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் திருமணத்திற்கு பின் தனது மகள் புகுந்த வீட்டில் கொடுமைப்படுத்தப்படுவதாக அறிந்தார்.

அதுமட்டுமின்றி சாக்சியின் கணவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர் என்று தெரியவந்ததை அடுத்து  அவரது மகள் விவாகரத்துக்கு  விண்ணப்பம் செய்தார். இந்த நிலையில் சாக்சிக்கு விவாகரத்து கிடைத்த நிலையில் தனது மகளை மேளதாளத்துடன் அவரது தந்தை பிரேம்குமார் ஊர்வலம் போல் நடத்தி அழைத்து வந்தார்.

இது குறித்து அவர் கூறிய போது திருமணத்திற்கு பிறகு பிரச்சனையில் சிக்கி இருக்கும் பெண்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் என்னை முன் உதாரணமாகக் கொண்டு ஏமாற்றப்படும்  பெண்களை அவர்கள் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments