ரேஷன் ஊழல்.. அதிகாலையில் கைதான முக்கிய அமைச்சர்.. அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:40 IST)
ரேஷன் ஊழல் செய்ததாக இன்று அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால்  மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேற்குவங்க மாநில வனத்துறை அமைச்சர் ஜோதி பிரியா என்பவர் ரேஷன் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். 
முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருக்கும் இவர் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்த சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில் இந்த சோதனைக்கு பின்னர் ஜோதிப்பிரியா கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் தன்னை அரசியல் ரீதியாக மத்திய அரசு பழிவாங்குகிறது என கைது செய்யப்பட்ட ஜோதிப்பிரியா தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments