Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Advertiesment
Chandra priyanka
, சனி, 21 அக்டோபர் 2023 (19:56 IST)
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி யூனியனில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரா பிரியங்கா( 33வயது).

இவர் அங்கு பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

எனவே, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் செல்வம், ‘சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பிருந்தே பதவியில் இருந்து  நீக்கப்பட்டார்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 12 கோடி மதிப்புள்ள மதுபானம்...