அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராட்டம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடக்க இருக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப்பும் மோதுவது உறுதியாகி விட்டது.
டொனால்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு அந்த நாட்டில் பெண்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென 100க்கும் அதிகமான பெண்கள் டொனால்டு அதிபர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணாடியால் தங்களது உடலை மறைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிளீவ்லேண்டில் நிர்வாண ஆர்ப்பாட்டம் செய்வது சட்டத்திற்கு எதிரானது என்ற நிலையில் இவர்களின் போராட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர் என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளனர்.