Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.1.5 கோடி ரொக்கம்.. 1 கிலோ தங்கம்.. 1.5 கிலோ வெள்ளி.. மாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த வரதட்சணை..!

Advertiesment
தலைப்புச் செய்திகள்

Siva

, வியாழன், 8 மே 2025 (09:10 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில், தனது மகளை திருமணம் செய்யும் மாப்பிள்ளைக்கு ஒன்றரை கோடி ரொக்கம், ஒரு கிலோ தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி என மொத்தம் 21 கோடி ரூபாய் மதிப்பிலான வரதட்சணை கொடுத்துள்ளதாக வெளியான செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
 
திருமணத்திற்கு வரதட்சணை வாங்குவதும், வரதட்சணை கொடுப்பதும் சட்டப்படி குற்றமாக இருந்தாலும், இந்தியாவில் இது பரவலாக நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகனுக்கு  மாமனார் 21 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.
 
அந்த வரிசையில், ஒரு கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி, ஒன்றரை கோடி ரொக்கம் மற்றும் ஏராளமான நிலங்கள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கூடவே, ஒரு பெட்ரோல் பங்கும் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
திருமண சடங்கின்போது மாமனார் தரப்பில் மருமகனுக்கு பரிசுகள் வழங்குவது வடஇந்தியாவில் சாதாரணமாக இருந்தாலும், 21 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா நடத்தியது பழிக்குப்பழி தாக்குதல்; பேசித் தீர்க்க முயல்கிறேன்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!