அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

Siva
புதன், 8 அக்டோபர் 2025 (16:44 IST)
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தாமரசேரி அரசு மருத்துவமனையில், மருத்துவர் விபின் பி.டி. மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சனுப் என்ற நபர், தனது 9 வயது மகள் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் நோயால் ஆகஸ்ட் மாதம் இறந்ததற்கு மருத்துவரே காரணம் என்று குற்றம் சாட்டி இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்.
 
மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தாமரசேரி காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து சனுபை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் மருத்துவர்கள் மீது நடக்கும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இது நிகழ்ந்துள்ளது. சமீபத்தில், மணிப்பூர் இம்பாலில், சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது நோயாளி இறந்ததால், கோபமடைந்த கும்பல் மருத்துவமனையைச் சேதப்படுத்தியதுடன், மூத்த மகப்பேறு மருத்துவர் ஒருவரையும் தாக்கியது.
 
கர்நாடகாவில் உள்ள ஹாசன் மருத்துவமனையில், போதையில் இருந்த கும்பல் பணியில் இருந்த மருத்துவர்களைத் தாக்கியது. நோயாளி மரணங்களுக்காக மருத்துவர்களை குறிவைத்து தாக்கப்படும் இதுபோன்ற சம்பவங்கள், மருத்துவ சமூகத்தினரிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பாலைவன காற்றிலிருந்து நீரை பிரித்தெடுத்தெடுக்கலாம்.. வேதியியல் நோபல் பரிசு பெற்ற மூவரின் சாதனை..!

16 வயது மாணவனை கத்தியால் குத்திய தலைமை காவலர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments