கேரளாவில் 1,157 பள்ளி கட்டிடங்கள் வகுப்புகள் நடத்த பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் இல்லை என சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கேரளாவில் 875 அரசு பள்ளிகள், 262 உதவி பெறும் நிறுவனங்கள், 20 உதவி பெறாத பள்ளிகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் உள்ளன. கொல்லம் (143), ஆலப்புழா (134), திருவனந்தபுரம் (120) மாவட்டங்கள் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளன. கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, இப்பிரச்சினையை அரசு தீவிரமாக கவனித்து வருவதாகவும், புனரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் இரண்டு முறை ஆட்சி செய்து வரும் ஒரு மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று ஆளும் கட்சியின் அறிக்கை கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
அந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் உடனடியாக மாணவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்