Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உபியில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்ட அகிலேஷ்.. தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பு..!

Advertiesment
akilesh

Siva

, திங்கள், 14 அக்டோபர் 2024 (13:51 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் அதில் 5 தொகுதிகளை கேட்ட நிலையில், தன்னிச்சையாக அகிலேஷ் யாதவ் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளார். மேலும், 4 தொகுதிகளுக்கான வேட்பாளரை விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி கூட்டணியாக போட்டியிட்ட நிலையில், நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில், ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து, காங்கிரஸ் கட்சிக்கு அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி கேட்டிருந்த தொகுதிகளும் இந்த ஆறு தொகுதிகளில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 5 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டிருந்த நிலையில், அகிலேஷ் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி முறிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததே, அந்த கட்சியை கூட்டணியில் இருந்து விலக்க காரணம் என்று கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணியாக வெற்றி பெற்றாலும், தேசிய மாநாடு கட்சி தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கான அரையிறுதிக் கதவை பாகிஸ்தான் திறக்குமா? இன்று முக்கிய ஆட்டம்