Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்டேக் கட்டாயம்; கால அவகாசம் நீட்டிப்பு! – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:44 IST)
நாளை முதல் இந்தியாவின் அனைத்து சுங்க சாவடிகளிலும் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை ஒத்திவைத்துள்ளது மத்திய அரசு.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்னமும் பல வாகனங்கள் பாஸ்டேக் வசதி பெறாமல் உள்ளன. இதனால் நேரடி கட்டணம் செலுத்த ஒரு கவுண்டரும், பாஸ்டேக் மூலம் பணம் செலுத்த மற்ற கவுண்டர்களும் என சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜனவரி 1, 2021 முதல் நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் முழுமையாக பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வரை நிறைய வாகனங்களில் பாஸ்டேக் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதால் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு பாஸ்டேக் பெறுவதற்கான அவகாசத்தை ஒரு மாத காலம் நீட்டித்து பிப்ரவரி முதலாக கட்டாய பாஸ்டேக் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments