Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் வீட்டு வாசலில் சாணத்தை வீசிய விவசாயிகள்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (10:19 IST)
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளதாகக்கூறிய முன்னாள்  அமைச்சரின் வீட்டு வாசலில் சாணத்தைக் குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 38 வது நாளாக மத்திய அரசின்  3   வேளாண்சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகத் தகவல் வெளியானது.

 
இந்நிலையில், இன்று மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளுக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையில் மீண்டும் மறு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், டெல்லி விவசாயிகள் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளதாக பாஜக முன்னாள் அமைச்சர் திக்சன் சூட் கருத்து தெரிவித்தார். இதனால் கொத்தெழுந்த விவசாயிகள் பஞ்சாப் மாநிலம் ஜோஷியான்பூரில் உள்ள அவரது இல்லத்தின் முன் ஏராளான சாணியைக் குவித்து வைத்துப் போயினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் எக்காரணம் கொண்டும் இச்சட்டங்களை திரும்பப் பெற மாட்டோமென மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments