Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி!

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (21:21 IST)
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தற்காலிக விடுமுறை அளித்து சமாளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்தால் விரைவில் பல ஆட்டோ மொபைல் கம்பெனிகள் மூடப்படும் என்று அஞ்சப்படுகிறது.
 
 
இந்த நிலையில் விவசாயி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கார் கம்பெனிகளுக்கு ஒரு அசத்தலான கேள்வியைக் கேட்டுள்ளார். தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்கும் போதும் நாங்கள் விவசாயம்செய்தோம், 3 ரூபாய்க்கு விற்கும் போதும் விவசாயம் செய்தோம். எந்த காரணத்தையும் நாங்கள் விவசாயத்தை நிறுத்துவதில்லை. அதேபோல் 10 லட்ச ரூபாய்க்கு விற்கும் காரை, தொழில் சரிவை சந்திக்கும் போது ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யுங்கள். அதற்கேற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள். தொழில் நன்றாக நடக்கும். அவ்வாறு செய்யாமல் நிறுவனத்தை மூடி விட்டு செல்வது எந்த வகையில் நியாயம்? நாங்கள் என்றாவது விவசாயத்தை நிறுத்த போவதாக  கூறி இருக்கின்றோமா?  என்று அவர் ஒரு சாட்டையடி கேள்வியை கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு விலைகள் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
ஆனால் அதே நேரத்தில் காரும் தக்காளியும் ஒன்றா? இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரும் தக்காளியும் ஒன்றில்லை. ஆனால் தொழில் நசிவடையும்போது மாற்று வழியை தேட வேண்டுமே தவிர நிறுவனத்தை மூடக்கூடாது என்றே பலரது கருத்தாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments