இந்தியாவில் ஏராளமானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருக்கும் நிலையில் அவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் தனி கட்டணம் விதிக்க ட்ராய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பலரும் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வகையிலான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் சொந்த அழைப்புகளுக்கும், வியாபாரம் சார்ந்த தொடர்புகளுக்கும் என இருவேறு எண்களை பலரும் வைத்திருக்கின்றனர். அவ்வாறாக இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பவர்களில் பலர் ஒரு சிம்கார்டுக்கு மட்டும் ரீசார்ஜ் செய்வதும் மற்றொரு சிம் கார்டை ரீசார்ஜ் செய்யாமல் அழைப்புகள் மேற்கொள்ள, வாட்ஸப் வசதிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதும் நடக்கிறது.
தற்போது TRAI நடத்திய ஆய்வில் இந்தியா முழுவதும் 19 சதவீதம் சிம் கார்டுகள் டூவல் சிம் மொபைல்களில் ரீசார்ஜ் செய்யமல் பிற பயன்பாடுகளுக்காக மட்டும் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. சில நாடுகளில் இதுபோல ரீசார்ஜ் செய்யாமல் செல்போனில் போட்டு வைத்திருக்கும் சிம் கார்டுகளுக்கு தனி கட்டணம் விதிக்கும் நடைமுறை உள்ளது.
தற்போது அதுபோல இந்தியாவிலும் செல்போனில் வைத்திருக்கும் ஆனால் ரீசார்ஜ் செய்யாத சிம்கார்டுகளுக்கு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மூலமாக தனி கட்டணம் விதிக்கும் நடைமுறயை அமல்படுத்த ட்ராய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.