காங்கிரஸ் தலைவராக பிரியங்கா வந்தால் வரவேற்போம் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் நேரு குடும்பத்தில் இருந்து இல்லாமல் வேறு யாராவதாக இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ்ஸின் தலைவராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பலக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ‘ காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும் என வற்புறுத்துவோம். ஆனால் பிரியங்கா காந்தி வந்தாலும் வரவேற்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.