குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை கொலை செய்யும் உரிமை சாதாரண மனிதனுக்கும் உள்ளது என்று ஹரியானா டிஜிபி கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்துயுள்ளது.
சண்டீகரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹரியானா மாநில தலைமை காவல் துறை அதிகாரி, குற்றவாளியை கொலை செய்வதற்கு சாதாரண மனிதனுக்கு சட்டப்படி உரிமை உள்ளது என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்துயுள்ளது.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
யாராவது ஒரு நபர் உங்கள் இல்லத்தை சேதப்படுத்தினாலோ, உயிரை பறிக்கும் செயலில் ஈடுபட்டாலோ, அல்லது பெண்கள் அவமதிப்புக்கு ஆளாகும்போதோ சம்பந்தப்பட்ட குற்றவாளியை கொல்வதற்கு சாதாரண மனிதனுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. இது காவல் துறையின் பணி மட்டும் கிடையாது, என்றார்.