Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு இரண்டாவது இடம்

Advertiesment
மோடி
, சனி, 28 மே 2016 (02:14 IST)
உலகளவில் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் ஒபாமாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை நரேந்திர மோடி பிடித்துள்ளார்.


 

 
பேஸ்புக் வலைதளத்தில் உலகளவில் அதிக லைக்குகளை அள்ளும் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2வது இடம் பிடித்துள்ளார். மோடி பேஸ்புக்கில் பதிவிட்ட படங்களான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய படத்திற்கு 17 லட்சம் லைக்குகளும் பிரதமர் இல்லத்தில் தனது தாயாருடன் மோடி எடுத்த படத்துக்கு 16 லட்சம் லைக்குகளும், கிடைத்துள்ளது.
 
மேலும் சராசரியாக ஒரு நாளைக்கு 2.89 போஸ்ட்களை பேஸ்புக்கில் மோடி பதிவிடுவதால் அவரது பதிவுகளுக்கு இதுவரை 17.94 கோடி லைக்குகள் கிடைத்துள்ளது. 
 
கடந்த ஒரு வருடத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் உணவு பதப்படுத்தும் அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் பாதல் ஆகியோரும் பேஸ்புக்கின் மேல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
 
அதிக லைக்குகளை அள்ளும் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருந்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு 99 சாட்டையடிகள்