Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர்ஹீரோவா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னுதான்! ஸ்பைடர்மேனுக்கு அபராதம் விதித்த போலீஸ்!

Prasanth Karthick
வியாழன், 25 ஜூலை 2024 (15:11 IST)
பிரபலமான சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்மேன் போல உடையணிந்து சாகசம் செய்ய முயன்றவரை டெல்லி போக்குவரத்து காவலர்கள் பிடித்து அபராதம் விதித்த சம்பவம் வைரலாகியுள்ளது.



டெல்லியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஆதித்யா சூப்பர் ஹீரோ படங்களை விரும்பி பார்ப்பதுடன், அதேபோன்ற ஆடைகளை அணிந்து கொண்டு சாகசங்களில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக ஸ்பைடர்மேன் உடையில் சாலையில் வேகமாக பைக் ஓட்டி சென்று சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது போலீஸார் அவரை பிடித்து அபராதம் விதித்துள்ளனர்.

ஆனாலும் தனது சாகச முயற்சிகளை நிறுத்தாத ஸ்பைடர்மேன் ஆதித்யா, மீண்டும் ஸ்பைடர்மேன் கெட்டப்பில் கார் ஒன்றின் மீது அமர்ந்து செல்வது போல வீடியோ ரீல்ஸ் ஒன்றை ரெடி செய்து ஷேர் செய்துள்ளார். இதனையடுத்து சீட் பெல்ட் அணியாமல் ஆபத்தான முறையில் கார் ஓட்டியதாக டெல்லி போலீஸார் மீண்டும் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னுதான் என்ற ரீதியில் செயல்பட்ட டெல்லி போக்குவரத்து காவலர்களை பலரும் பாராட்டியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments