Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துத்திக் கீரையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

துத்திக் கீரையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!
துத்தி கீரை குடல் புண்களை ஆற்றி மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துக் சாப்பிடலாம். துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.
ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். சமயம் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து அதை 100 மி.லி நீரில் கொதிக்க வைத்துச் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும். துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல்  ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.
 
உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு ‘அதிபலா’ என்ற வேறு பெயரும் உண்டு. இதன் இலையில் உள்ள தாவரக்  கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் வலி நீக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பல சித்த மருந்துகளில் துத்தி  சேர்க்கபடுகிறது.
 
பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணம் தெரியும். மேலும் கருப்பை சார்ந்த நோய்களுக்கு தீர்வு தருகிறது.
 
அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுத்தல், சிறுநீரில் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி நீரில் கொதிக்கவைத்துப் பருகலாம்.
 
வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
 
மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் குணம் பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழி பணியாரம் செய்ய...!!