மக்களவை தேர்தல் எப்போது? வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (11:05 IST)
மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
 
மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தல் அறிவிப்போடு காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்தும் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments