Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி படத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் !

Advertiesment
மோடி படத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் !
, புதன், 27 மார்ச் 2019 (13:16 IST)
விவேக் ஓப்ராய் நடித்துள்ள நரேந்தர மோடி படத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். இதற்கான பதிலை மார்ச் 30 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

விவேக் ஓப்ராய் நடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பிஎம் நரேந்திரமோடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகியிருக்கும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பிரதமர் வேட்பாளரின் திரைப்படம் வெளிவருவது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்துக்கு தடை கேட்டு காங்கிரஸும் வலியுறுத்தி வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து  தயாரிப்பு நிறுவனத்துக்கும், இசை நிறுவனத்துக்கும் டெல்லியின் தேர்தல் அதிகாரி கே.மகேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசியல் படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களைப் பற்றியப்படங்களை வெளியிடுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதுபோல ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியாவதற்கு முன்பு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்னதாகவே சான்றிதழ் பெறவேண்டும். ஆனால் மோடி படக்குழு இந்த விதிமுறைகளை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் மீறல் தொடர்பான பரிந்துரைகளை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புப்வோம் என தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலுக்கு முன்னர் எதாவது நடக்கலாம் – பாக் பிரதமர் இம்ரான் கான் சந்தேகம் !