வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடியின் கடிதம் வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதை அடுத்து அதை உடனடியாக நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடி அனுப்புவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம் ஒரு செய்தி அனுப்பப்பட்டு வருகிறது என்பதும் அதில் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா செய்த சாதனைகளை குறித்து விளக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் பிரதமர் வாக்காளர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரணை செய்த தேர்தல் ஆணையம் அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடியின் கடிதம் அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இந்த வாட்ஸ் அப் செய்தி அனுப்புவது உடனடியாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.